Thursday, November 29, 2007

ஆத்துகிட்டே கோவிச்சுக்கிட்டு.....

சின்ன சின்ன கோபங்கள், வெறுப்புகள்,
ஏலாமைகள் ஒருவனைத் தூண்டி விடும்போது,
அல்லது சின்னச் சின்ன எரிச்சல்கள்,
ஏரணம் இல்லாத தயக்கங்களும்,
கோபங்களும் ஒருவரை ஆளும்போது,
தனக்குப் பிடித்த ஒன்றாக இருந்தாலும்
அதை விட்டுத் தள்ளிப் போய்விடுகிறார்கள்.

அதனால் இழப்பிருப்பினும் வீம்புக்கென்றே
அதனை இறுமாப்பாக தள்ளிவிடுகிறார்கள்.

இது காலம் கடந்து யோசிக்கும்போது
எவ்வளவு முட்டாள்தனம் என்பதைப்
பல நேரங்களில் உணர்த்துவதாக இருக்கும்.

அம்மாதிரியான சூழலில் இந்தப் பழமொழியை
எண்ணிக் கொண்டால் சிரிப்பு வந்து விடுவது மட்டுமல்ல சிந்தனையும் வந்துவிடத்தான் செய்கிறது.

"ஆத்துகிட்ட கோவிச்சுக்கிட்டு
சூத்து கழுவாம இருந்தால் எப்படி?"

என்று ஒரு முறை வறட்டு வீம்பின் பிடியின் மனம் இருக்கும் போது சொல்லிப் பாருங்கள். ஒரு வேளை வீம்பு விலகினாலும் விலகிவிடும்.

ஆத்துகிட்ட = ஆறுடன்.நீரோடும் ஆற்றின் மருவல்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

6 comments:

Prabhuram said...

ஆட மாட்டா தேவடியா, ஆனா வீதி கோணை..

Prabhuram said...

ஆத்தைக்கண்டு சூத்தக்கழுவி, அம்மியக்கண்டு மொளகாய் அரைக்கறது...

Prabhuram said...

வித்தாரக்கள்ளி சந்தைக்கு போனாலாம், கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்...

Prabhuram said...

சீவக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம்!

Prabhuram said...

ஆமை பூந்த வீடும் அமீனா பூந்த வீடும் உருப்படாது...

Prabhuram said...

கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்...