Monday, September 17, 2007

மேயிற மாட்டை....

யாரேனும் தொலைபேசினால் "busy" யா இருக்கிங்களா... என்பார்கள்.
"busy" யா இல்லைன்னா பேசலாம்னு பார்த்தேன் என்பார்கள்.

என் அன்புக்குரியவர் ஒருவர் தொலைபேசினார். வேலையாய் இருக்கியா
என்றார். கொஞ்சம் வேலையாத்தான் இருக்கேன்... இருந்தாலும் பரவாயில்லல
சொல்லுங்க... என்றேன்.

இல்லை இல்லை அப்புறம் தொலைபேசறேன்....ஏன்னா
"மேயிற மாட்டை நக்கற மாடு கெடுக்கக் கூடாதில்ல" என்றார்...

எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.

நெடுநேரம் இப்பழமொழி என்னை சிரிப்பில் ஆழ்த்தியது.

"மேயிற மாட்டை நக்கற மாடு கெடுக்கும்" என்பது பழமொழி போலும்!

நல்ல தமிழில் சொன்னால்

"மேய்கின்ற மாட்டை நக்குகின்ற மாடு கெடுக்கும்"

சிரிப்பு குறைந்ததும் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தும்போது
யாரிடம் பார்த்துப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம் என்றும்
தோன்றியது.

இதற்கு விளக்கம் தேவையில்லை.

நான் இதை அறிந்ததில்லை. எனக்கு இது புதிது.
ஆனால் சுவையான ஒன்றாக இருந்தது.

3 comments:

Aananthen said...

அய்யா, இதில் குறையாகக் காண ஏதுமில்லை. நானும் ஒன்றைத் தருகிறேன். சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். தொடரட்டும். அவ்வப்போது அனுப்புங்கள்.

ஆறு எத்தனை சூத்தைப் பார்த்தது
சூத்து எத்தனை ஆத்தைப் பார்த்தது

சில பணிகள் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்படும்போது இதை உபயோகிப்பது வழக்கம்.

புரட்சி தமிழன் said...

aananthen

ஆறு சரி ஆத்தை இது எங்கேயோ இடிக்குதே
எது எப்படியோ ஆற்றை அசிங்கம் பணிடீங்க

nayanan said...

// Aananthen said...
அய்யா, இதில் குறையாகக் காண ஏதுமில்லை. நானும் ஒன்றைத் தருகிறேன். சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். தொடரட்டும்.
//

ஆனந்தன் ஐயா, வாங்க.
நிறைய அனுப்புங்கள்.

நமது மக்கள் கெட்ட வார்த்தை என்று
எல்லாத்தையும் விட்டுடுறாங்க.
அதற்கு பதில் ஆங்கிலத்தில் சொல்லத் தயங்கமாட்டேன்கிறாங்க.

அன்புடன்
நாக.இளங்கோவன்